ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை

திருவண்ணாமலை, ஆரணியில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை,
முஸ்லிம் சமூகத்தினரின் முக்கியமான பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகை ஈகைத்திருநாள் என்றும், நோன்பு பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. ரம்ஜான் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம்கள் காலையில் எழுந்து குளித்து புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகை நடத்தினர்.
திருவண்ணாமலையில் மணலூர்பேட்டை சாலையில் உள்ள ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டு தொழுகை செய்தனர். பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சிறுவர்களும் ஒருவருக்கொருவர்கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியையும், அன்பையும் வெளிப்படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் உற்றார் உறவினர்களுக்கு அசைவ உணவு வழங்கினர்.
திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் 110 ஈத்கா மைதானங்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதனை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமையில் முக்கிய மைதானங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் ரோந்து பணியிலும் ஈடுபட்டிருந்தனர்.
ஆரணி நகரில் உள்ள மசூதி், ஷராப்பஜார்் மசூதி், பென்ஷன்லைன் மசூதி், காஜிவாடை பகுதி மசூதி், சைதாப்பேட்டை கெங்கையம்மன் கோவில் எதிரே உள்ள தர்கா மைதானம் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்
Related Tags :
Next Story