கிருஷ்ணகிரி, ஓசூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, ஓசூரில் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் புதிய பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நேற்று நடந்தது. மாநில உரிமைக்கு, சமூக நீதிக்கு எதிரான இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்தும், நீட் தேர்வுகளை எதிர்த்தும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் மதிமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாணிக்கம், அமைப்பாளர் கதிரவன், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், துணைத் தலைவர் அறிவரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தர்மபுரி மண்டல செயலாளர் திராவிடமணி, மாநில அமைப்பு செயலாளர் ஊமை. ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் நிர்வாகிகள் லூயிசுராசு, வடிவேல், மனோகர், வேலன், சிவராஜ், சதீஷ்குமார், ஆறுமுகம், சீனிவாசன், ராசா, திருமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராசா நன்றி கூறினார்.
இதேபோன்று ஓசூர், ராம்நகர் அண்ணா சிலையருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் வனவேந்தன் தலைமை தாங்கினார். நகர தலைவர் மணி வரவேற்றார். மாவட்ட மகளிரணி தலைவர் செல்வி, பொதுக்குழு உறுப்பினர் துக்காராம், மாவட்ட அமைப்பாளர் முனுசாமி மற்றும் மாவட்ட மாணவர் அணி நிர்வாகி வெற்றி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாவட்ட செயலாளர் செல்வம், முன்னாள் ஓசூர் நகர்மன்ற தலைவர் மாதேஸ்வரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் சேதுமாதவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், திராவிடர் கழக மகளிரணி மாவட்ட செயலாளர் லதாமணி, தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் சபரி மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். மேலும் இதில் திராவிடர் கழக பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில், ஓசூர் நகர செயலாளர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story