வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது; முன்னாள் ராணுவ வீரர் மனைவியுடன் பலி

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முன்னாள் ராணுவ வீரரும் அவரது மனைவியும் பலியானார்கள்.
வாடிப்பட்டி,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி வல்லபகணபதிநகரை சேர்ந்தவர் ரமேஷ்(வயது 48). முன்னாள் ராணுவவீரர். இவரது மனைவி கல்பனாதேவி(40). இவர்களுக்கு ரேவதி, நந்தினி என்ற மகள்களும், நவீன் என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை வாடிப்பட்டியிலிருந்து மதுரைக்கு ரமேஷ் மற்றும் கல்பனாதேவி இருவரும் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
இவர்கள் வாடிப்பட்டி அருகே திண்டுக்கல்-மதுரை நான்குவழிச்சாலையில் பெரியாறு பாசன கால்வாய் பாலத்தில் சென்றபோது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு கல்பனாதேவி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் படுகாயம் அடைந்த ரமேசை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர் கேசவராமச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். கணவன்-மனைவி இருவரும் வி்பத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story