தர்மபுரியில் கல்லூரி பெண் விரிவுரையாளர் தற்கொலை

தர்மபுரியில் தனியார் கல்லூரி பெண் விரிவுரையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தர்மபுரியை சேர்ந்தவர் கவுதம். இவர் தர்மபுரியில் உள்ள ஒரு செல்போன் கடையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி லாவண்யா (வயது 28). இவர் தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்து வந்தார். இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இந்த நிலையில் வீட்டின் உள்ள ஒரு அறையில் லாவண்யா தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று லாவண்யாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் அவருடைய உடலை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். வீட்டில் லாவண்யா எழுதியதாக ஒரு கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அதில் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என்று எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாவண்யா தற்கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story