திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பு விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அனைத்து துறை அலுவலர்களுக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் திட்டப்பணிகள், மழைநீர் சேகரிப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஒன்றியங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட இலக்குக்கு ஏற்ப மரக்கன்று நடுதல் பணிகளை இந்த மாதம் இறுதிக்குள் முடிக்க வேண்டும். மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு வசதிகளை புதிதாக உருவாக்க வேண்டும். காய்ந்த நிலையில் உள்ள மரக்கன்றுகளை அகற்றி அதற்கு பதிலாக புதிய மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும்.
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ள வளாகத்தில் குறைந்தபட்சம் 10 முதல் 25 மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும். அரசு மூலம் நடப்பட்ட மரக்கன்றுகளை கல்வி மற்றும் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து பாதுகாக்க வேண்டும்.
நீர்நிலைகளில் உள்ள நீர்வரத்து மற்றும் போக்கு கால்வாய்களை சுத்தம் செய்து மேம்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் இதர திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட தடுப்பணைகளில் மழைநீர் தேங்கும் வகையில் முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். அரசு கட்டிடங்கள், பொதுக்கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தனிநபர் இல்லங்களில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நன்கு பயன்படுத்தும் வகையில் அடைப்புகள், குப்பையை சுத்தம் செய்ய வேண்டும்.
பண்ணைக்குட்டைகள், அகழிகள் அமைத்தல் பணிகளை தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் செய்ய வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மரக்கன்றுகள் நடுதல், மழைநீர் சேகரிப்பு உட்கட்டமைப்பு கட்டிடங்களை புதிதாக உருவாக்க வேண்டும். அனைத்து ஊராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள வீடுகளில் எண்ணிக்கை, தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் எண்ணிக்கை, அவைகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்புகளின் தற்போதைய பயன்பாட்டு நிலை ஆகிய விவரங்களை அனைத்து துறை அலுவலர்களும் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், உதவி இயக்குனர்(ஊராட்சிகள்) பாலசுப்பிரமணியன், செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story