சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 8 July 2019 3:45 AM IST (Updated: 8 July 2019 12:09 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் பட்டதாரி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம் அம்மாபேட்டை அருகே உள்ள பரமக்குடி நன்னுசாமி தெருவை சேர்ந்தவர் சாந்தாராம். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள் நந்தினி (வயது 23). இவர் பி.எஸ்சி. பட்டதாரி ஆவார். மேலும் அழகுகலை நிபுணர் படிப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று பெற்றோர் வெளியில் சென்று இருந்தனர். வீட்டில் தனியாக இருந்த நந்தினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியில் சென்று இருந்த சாந்தாராம், சுமதி இருவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் இதுகுறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நந்தினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பட்டதாரி பெண் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

இது குறித்து போலீசார் கூறும்போது நந்தினிக்கு அவரது பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து உள்ளனர். அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்து வந்து உள்ளனர். இந்த நிலையில் தான் நந்தினி தற்கொலை செய்து உள்ளார். எனவே திருமணம் பிடிக்காமல் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம், என்றனர்.

Next Story