பண்ருட்டி, கடலூரில் ஜமாபந்தி நிறைவு விழா - 2178 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

பண்ருட்டி, கடலூர் தாலுகாவில் ஜமாபந்தி நிறைவு விழா நடைபெற்றது. இதில் 2178 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடலூர்,
பண்ருட்டி தாலுகா அலுவலகத்தில் கடந்த மாதம் 11-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் தாலுகாவுக்கு உட்பட்ட குறுவட்டங்களை சேர்ந்த கிராம மக்களிடம் இருந்து பட்டா மாற்றம், ரேஷன் கார்டுகள் போன்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதை தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு விழா நேற்று முன்தினம் மாலை தாலுகா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதற்கு கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கினார். தாசில்தார் கீதா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் ராஜஸ்ரீ, சமூக நல பாதுகாப்பு திட்ட தாசில்தார் பூபாலசந்திரன், தாசில்தார் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
தொடர்ந்து 1,889 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 87 லட்சத்து 55 ஆயிரத்து 988 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் அன்புசெல்வன், சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
கடலூர் தாலுகா அலுவலகத்தில் கடந்த 11-ந்தேதி தொடங்கிய ஜமாபந்தியில் கடலூர் சப்-கலெக்டர் சரயூ கலந்து கொண்டு, மஞ்சக்குப்பம், ரெட்டிச்சாவடி, திருவந்திபுரம் ஆகிய குறுவட்டங்களை சேர்ந்த 84 வருவாய் கிராம மக்களிடம் மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் ஜமாபந்தி நிறைவு நாள் விழா தாலுகா அலுவலகத்தில் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் வசந்தி வரவேற்றார். விழாவுக்கு சப்-கலெக்டர் சரயூ தலைமை தாங்கி, 289 பேருக்கு உதவித்தொகை, பட்டா மாற்றம், ரேஷன் கார்டுகள் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். தாசில்தார் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். விழாவில் குடிமை பொருள் தாசில்தார் ஜெயசெல்வி, சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் பன்னீர்செல்வம், துணை தாசில்தார்கள் அசோகன், பாலசுப்பிரமணியன், ராஜேஷ், வருவாய் ஆய்வாளர்கள் ரகுநாதன், சீனுவாசன், லலிதா, மஞ்சக்குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக இந்த ஜமாபந்தியில் 1809 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 918 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 891 மனுக்கள் ஏற்கப்பட்டு, அதில் 281 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்.டன. 624 மனுக்கள் நிலுவையில் உள்ளன என்று வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story