உருக்கு ஆணையத்தில் வேலைவாய்ப்பு 205 காலியிடங்கள்

உருக்கு ஆணைய நிறுவனத்தில் அதிகாரி மற்றும் அலுவலக பணிகளுக்கு 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்திய உருக்கு ஆணைய நிறுவனம் சுருக்கமாக செயில் (Sail) என்று அழைக்கப்படுகிறது. ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் செயல்படும் உருக்கு ஆலை நிறுவனத்திலும், மகாராஷ்டிராவில் உள்ள உருக்கு ஆலையிலும் அதிகாரி மற்றும் அலு வலக பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
டெபுடி மேனேஜர், ஜூனியர் மேனேஜர், பயர் ஆபரேட்டர், பயர் என்ஜின் டிரைவர், ஆபரேட்டர் கம் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 205 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு பணிக்கும் உள்ள காலியிட விவரம் மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையிலான பணியிட விவரங்களை முழுமையான விளம்பர அறிவிப்பில் பார்க்கலாம்.
ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. ஆபரேட்டர், டெக்னீசியன் போன்ற அலுவலக பணியிடங்களில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. அதிகாரி பணிக்கு 37 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, நேர்காணல், உடல் தகுதித் தேர்வு இவற்றில் பணிக்கு அவசியமான தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். குறிப்பிட்ட கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 31-7-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.sail.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story