குறைதீர்க்கும் நாள் கூட்டம்: குடிநீர் கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கரூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், குடிநீர்கேட்டு கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
கரூர்,
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 304 கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
கூட்டத்தில் வெள்ளியணை சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கேட்டு மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். தற்போது காவிரிக்குடிநீர் எங்கள் பகுதியில் சரிவர வினியோகம் செய்யப்படுவதில்லை. மேலும் குடிநீர் தொட்டியுடன் கூடிய ஆழ்துளை கிணறுகளும் தூர்ந்துபோய் உள்ளதால் அதனை பயன்படுத்த முடிவதில்லை. எனவே குடிநீருக்காக பல்வேறு இடங்களுக்கு மக்கள் அலைந்து திரிவதால் சிரமத்திற்கு ஆளாகிறோம். எனவே குடிநீர் வினியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அதில் கூறியிருந்தனர்.
கிருஷ்ணராயபுரம் வட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் அளித்த மனுவில், திருக்காம்புலியூரில் மணலை பதுக்கி வைத்து லாரி, மினிவேன் உள்ளிட்டவற்றில் சிலர் திருட்டுத்தனமாக வெளியிடங்களுக்கு கடத்தி செல்கின்றனர். இது குறித்து கேட்டால் சமூக ஆர்வலர்களுக்கு மிரட்டல் விடுக்கின்றனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
பா.ஜ.க. மருத்துவ அணி மாவட்ட தலைவர் ரமேஷ் உள்பட நிர்வாகிகள் அளித்த மனுவில், கரூர் மாவட்டத்தில் தாதம்பாளையம் ஏரி, பஞ்சப்பட்டி ஏரி, வெள்ளியணை குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நீண்ட நாட்களாக தூர்வாரப்படாமல் உள்ளதால் அதில் தண்ணீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது. எனவே மழைக்கு முன்பாக அதனை தூர்வார உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு மருத்துவமனை உதவி பணி தொழிலாளர்கள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கொடுத்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் துப்புரவு, பாதுகாவலர், எலக்ட்ரீசியன், பிளம்பர், சமையல், தோட்ட வேலை உள்ளிட்ட பணிகளுக்காக ஒப்பந்த நிறுவனங்களால் தொழிலாளர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். ஆனால் இந்த சேவையானது 100 சதவீதம் அரசு நிதியில் செயல்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 260-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த முறையில் வேலை செய்கிறார்கள். எங்களுக்கு வாரவிடுமுறையின்றி இருப்பதால், குடும்பம் மற்றும் குழந்தைகள் பராமரிப்புக்கு போதிய நேரம் ஒதுக்க முடிவதில்லை. எனவே உதவி பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுமுறை வழங்கிட வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச ஊதியத்தை தடையின்றி வழங்கிட வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
கடவூர் தாலுகாவை சேர்ந்த சிவனடியார்கள் கூட்டமைப்பினர் அளித்த மனுவில், கடவூர் பகுதியில் ஈஸ்வரன் கோவில் நிலம் உள்ளது அரசுத்துறை பதிவேடுகள் மூலம் தெரிய வந்தது. எனவே அந்த நிலத்தை அடையாளம் கண்டு அங்கு சிவனடியார்களுக்கு தியானபீடம் அமைக்க ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.
மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அன்பழகன் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரி கணேஷ், கலால் உதவி ஆணையர் மீனாட்சி, சமூகபாதுகாப்புதிட்டம் தனித்துணை கலெக்டர் சரவணமூர்த்தி உள்பட அரசுத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story