வானவில் : கிளிப் ஆன் கேமரா

உலக அளவில் மிகச் சிறந்த கேமராக்களை (டி.எஸ்.எல்.ஆர்.) தயாரிக்கும் கேனன் நிறுவனம் தற்போது ஸ்டார்ட் அப் நிறுவனம் அளித்த யோசனையின் பேரில் புதிய ரக கேமராவை உருவாக்கியுள்ளது.
இன்டைகோகோ என்ற அந்நிறுவனம் கேமராக்கள் பென் டிரைவ் போல இருந்தால் சிறந்தது என வடிவமைப்பை வெளியிட்டது. அதற்கேற்ப இப்போது புதிய ரக சிறிய கேமராவை கேனன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. பாக்கெட்டில் எடுத்துச் செல்லும் சிறியரக கேமராவாக இது வந்துள்ளது. எடை குறைவானது, எந்த இடத்திலும் கிளிப் செய்யும் வசதி கொண்டது, எத்தகைய சூழலிலும் செயல்படும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 13 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. 1080 பி அளவில் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை இதில் பதிவு செய்ய முடியும். நீர் புகா தன்மை கொண்டது இதன் சிறப்பு. ஒரு மீட்டர் ஆழம் வரையிலான நீரில் 30 நிமிடம் இருந்தாலும் இது பாதிப்புக்குள்ளாகாது. டிரைபாட் மீது பொருத்தி படங்களை, வீடியோ காட்சிகளை பதிவு செய்ய முடியும்.
மேலும் புகைப்படங்களை வயர்லெஸ் மூலம் ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப்புக்கு அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. கேனன் மினி கேமரா செயலியை உங்கள் ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து கொண்டால், கேமராவில் பதிவாகும் காட்சிகளை போனில் பார்க்க முடியும். விரைவிலேயே இந்த கேமரா விற்பனைக்கு வரும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. கேனன் தயாரிப்புகளுக்கு எப்போதுமே சந்தையில் அதிக கிராக்கி உண்டு. இந்த சிறிய ரகக் கேமராவும் மிகச் சிறந்த வரவேற்பைப் பெரும் என்று நம்பலாம்.
Related Tags :
Next Story