மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு4 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் + "||" + Tuticorin A warm reception to the Chief Minister Edappadi palanisami

தூத்துக்குடியில்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு4 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்

தூத்துக்குடியில்முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு4 பேருக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்
தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் 4 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முதல்-அமைச்சருக்கு வரவேற்பு

பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் மாலை நடந்த திருமண நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் இரவில் ஓய்வு எடுப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்தார். அங்கு அவருக்கு தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை யூனியன் அலுவலகம் முன்பு தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவி

கடந்த வாரம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அப்போது, 4 பேர் நலத்திட்ட உதவிகள் கோரி மனு கொடுத்தனர். அவர்களின் மனு உடனடியாக பரிசீலனை செய்யப்பட்டு, அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை தூத்துக்குடியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி, ஒரு மூதாட்டிக்கு முதியோர் ஓய்வூதியத்துக்கான ஆணையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் ஒரு பெண்ணுக்கு தையல் எந்திரமும், மகளிர் திட்டம் மூலம் ஒரு பெண்ணுக்கு முத்ரா கடன் திட்ட அனுமதியும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் ஒருவருக்கு 3 சக்கர சைக்கிளையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர்ராஜூ, ராஜலட்சுமி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாவட்ட கலெக்டர்கள் சந்தீப்நந்தூரி (தூத்துக்குடி), ஷில்பா (நெல்லை), முன்னாள் எம்.பி. ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.