கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு


கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 18 July 2019 10:45 PM GMT (Updated: 18 July 2019 7:40 PM GMT)

கிருஷ்ணராயபுரம், லாலாபேட்டையில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஒன்றிய செயல் அலுவலர் பானு ஜெயராணி தொடங்கி வைத்தார். கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர் வலம் மாரியம்மன் கோவில் தெரு, பஸ்நிலையம் கீழ அக்ரகாரம், மேல அக்ரகாரம், மஞ்சமேடு வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் வீட்டுக்கூரையை மழை காலத்திற்கு முன்பு சுத்தப்படுத்த வேண்டும், குழாய்களில் ஏற்பட கூடிய அடைப்புகளை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். ஊர்வலத்தில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

லாலாபேட்டை

கிருஷ்ணராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கள்ளப்பள்ளி ஊராட்சி மன்றத்தின் சார்பில் லாலாபேட்டையில் மழைநீர்சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணராயபுரம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பிரபாகரன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை அரசு பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) விக்டர் மார்டின் தொடங்கி வைத்தார். லாலாபேட்டை அரசு பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் வீடுகளில் குடிநீரை சிக்கனமாக உபயோகிக்கவும், மழைநீரை பாதுகாக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கள்ளப்பள்ளி ஊராட்சி செயலாளர் லெட்சுமணன் செய்திருந்தார்.

Next Story