போலீசை கிண்டல் செய்து வீடியோ வெளியீடு கைதான இந்தி நடிகர் அஜாஷ் கான் சிறையில் அடைப்பு

மும்பை போலீசை கிண்டலடித்து சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைதான இந்தி நடிகர் அஜாஷ் கான் சிறையில் அடைக்கப்பட்டார்.
மும்பை,
மும்பையை சேர்ந்த இந்தி நடிகர் அஜாஷ் கான். இவர் அண்மையில் சர்ச்சைக்குரிய வகையில் 2 வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தார். ஒரு வீடியோ பதிவில், ஜார்கண்ட் மாநிலத்தில் கும்பலால் வாலிபர் கொலை செய்யப்பட்டதற்கு பழிவாங்க ஒன்று திரள வேண்டும் என குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.
மேலும் இதே பிரச்சினையை மையப்படுத்தி வீடியோ வெளியிட்ட 5 வாலிபர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை கண்டிக்கும் வகையில் மும்பை போலீசை கிண்டலடிக்கும் வகையில் அவர் 2-வது வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
இதன் பின்னர் அவரது போலீஸ் காவல் முடிந்ததை அடுத்து, மீண்டும் போலீசார் அவரை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.
அப்போது மாஜிஸ்திரேட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story