தஞ்சை ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தப்பு அடித்து விழிப்புணர்வு பிரசாரம் - பயணிகளிடம் துண்டுபிரசுரம் வினியோகம்


தஞ்சை ரெயில் நிலையத்தில், ரெயில்வே பாதுகாப்பு படையினர் தப்பு அடித்து விழிப்புணர்வு பிரசாரம் - பயணிகளிடம் துண்டுபிரசுரம் வினியோகம்
x
தினத்தந்தி 26 July 2019 10:15 PM GMT (Updated: 26 July 2019 10:18 PM GMT)

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தப்பு அடித்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டதுடன் பயணிகளிடம் துண்டுபிரசுரத்தை வினியோகித்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தப்பு அடித்து பயணிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் மாதப்பன், மோகன், ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சேகர் மற்றும் போலீசார், பயணிகளிடம் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

அப்போது 1-வது பிளாட்பாரத்தில் சோழன் எக்ஸ் பிரஸ் ரெயில் வந்து நின்றது. உடனே போலீசார், ரெயிலில் பயணம் செய்த பயணி களிடம் துண்டுபிரசுரங்களை வினியோகம் செய்தனர். அந்த துண்டுபிரசுரத்தில், நடைமேடைகளில் 15 வயதிற்குட்பட்ட சிறுவர்களையோ அல்லது சிறுமிகளையோ தனியாக பார்த்தால் உடனே சைல்டு லைன் எண்: 1098, ரெயில்வே பாதுகாப்பு படை உதவி மையம் எண்: 182 ஆகிய வற்றிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அறிமுகம் இல்லாதவர்கள் தரும் உணவு பொருட் களையோ அல்லது குளிர் பானங்களையோ வாங்கி சாப்பிடக்கூடாது. அதில் மயக்க மருந்து கலந்திருக்கக்கூடும். இதனால் உங்கள் உடமைகளை இழக்க நேரிடும். ஜன்னல் அருகில் அமர்ந்து பயணம் செய்யும் பெண்கள் அதிகமான நகைகளை அணிந்து செல்லக் கூடாது. படிக்கட்டில் நின்று பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தான செயலாகும். அது ரெயில்வே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். படியில் பயணம் நொடியில் மரணம் என்பதை மறக்கக் கூடாது. ஓடும் ரெயிலில் கதவின் அருகே நின்று கொண்டு செல்பி எடுக்கக்கூடாது. ஓடும் ரெயிலில் ஏறுவதும், இறங்குவதும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்பன போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

மேலும் ஒலி பெருக்கி மூலமும் விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது. ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரே தப்பு அடித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதை கண்டு பயணிகள் பாராட்டினர்.

Next Story