மாவட்ட செய்திகள்

மடத்துக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் + "||" + Demonstration on behalf of Marxist Communist Party

மடத்துக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மடத்துக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மடத்துக்குளம்,

மத்திய அரசின் அடக்குமுறை, உரிமை பறிப்பு, சட்ட திட்டங்களுக்கு எதிராக நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மடத்துக்குளம் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மடத்துக்குளம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொறுப்பாளர் வடிவேலு தலைமை தாங்கினார். பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தார். ராஜரத்தினம், செல்லத்துரை, கார்த்திகேயன், முத்துசாமி, பழனிச்சாமி, போன்ற கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.


இதே கோரிக்கையை வலியுறுத்தி பெதப்பம்பட்டி நால்ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.