மராட்டிய மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் பா.ஜனதாவில் இணைகிறார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்


மராட்டிய மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர்  பா.ஜனதாவில் இணைகிறார்? தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்
x
தினத்தந்தி 19 Aug 2019 5:55 AM IST (Updated: 19 Aug 2019 5:55 AM IST)
t-max-icont-min-icon

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மராட்டிய மேல்-சபை தலைவர் ராம்ராஜே நிம்பல்கர் பா.ஜனதாவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மும்பை,

காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் சமீபகாலமாக ஆளும் கட் சிகளான பா.ஜனதா, சிவசேனாவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களாக இருந்த சிவேந்திரசிங் போசாலே, சந்தீப் நாயக் மற்றும் வைபவ் பிச்சாத் ஆகியோர் பா.ஜனதாவில் இணைந்தனர்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரசுக்கு மீண்டும் ஒரு பின்னடைவாக அக்கட்சியின் மூத்த தலைவரும், மராட்டிய மேல்-சபை தலைவருமான ராம்ராஜே நிம்பல்கர் பா.ஜனதாவில் இணையப்போவ தாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு சத்தாராவை சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. உதயராஜே போசலேவுடன் நிலவும் மோதலே முக்கிய காரணம் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் கூறி வருகின்றன. சமீப காலமாக பொதுமேடைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது. தேசியவாத காங்கிரஸ் கட்சி நிறுவன தலைவர் சரத்பவார் இவர்களை சமாதானப்படுத்த எடுத்த முயற்சியும் தோல்வியில் முடிந்தது.

ராம்ராஜே நிம்பல்கர் பா.ஜனதாவில் இணைந்த பின்னரும் தொடர்ந்து மேல்- சபை தலைவர் பதவியில் நீடிப்பார் என கூறப்படு கிறது.

ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராதா கிருஷ்ண விகேபாட்டீல் பா.ஜனதாவில் இணைந்த நிலையில், முக்கிய பதவியில் உள்ள ராம்ராஜே நிம்பல்கர் அந்த கட்சியில் சேர இருப்பது, மராட்டிய அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தி உள் ளது.

Next Story