மாவட்ட செய்திகள்

வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள் + "||" + Eager buyers of Ganesh idols at Velayuthampalayam

வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள்

வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள்
வேலாயுதம்பாளையத்தில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
வேலாயுதம்பாளையம்,

விநாயகர் சதுர்த்தி விழா வருகிற செப்டம்பர் 2-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளைத்தில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரை அடி உயரம் முதல் 15 அடி உயரம் வரை பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டு வருகிறது.


இது தொடர்பாக வேலாயுதம்பாளையம் கடைவீதியில் விநாயகர் சிலைகள் தயாரித்து வரும் கதிர்வேல் கூறியதாவது:- நாங்கள் சிலைகள் தயாரிக்கும் தொழிலில் பரம்பரையாக ஈடுபட்டு வருகிறோம். அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் களிமண் மற்றும் கிழங்குமாவு கொண்டு தயாரிப்போம்.

தண்ணீரில் கரையக்கூடிய பவுடர்களால் ஸ்பிரே பெயிண்டிங் செய்யப்படுகிறது. சிங்கம், யானை, மயில், கருடன் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமைந்துள்ள நிலையில் சிலைகள் அமைக்கப்படுகின்றன. இந்த ஆண்டு பாகுபலி விநாயகர், யாழி வாகனத்தின் மீது விநாயகர் அமர்ந்திருப்பது போன்ற சிலையும், கிருஷ்ணருடன் விநாயகர் இருப்பது போன்ற சிலைகள் மக்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுஉள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்வமாக வாங்கி செல்லும் பொதுமக்கள்

தற்போது, விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதைதொடர்ந்து பொதுமக்கள் விநாயகர் சிலைகளை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பிறந்தநாளையொட்டி அண்ணா சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
அண்ணா பிறந்தநாளையொட்டி அவரது உருவ சிலை, உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
2. விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாட்டம்: காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுவதையொட்டி நேற்று காந்தி மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர்.
3. விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு - 1,800 சிலைகள் மட்டும் வைக்க அனுமதி
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவை மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டம் முழுவதும் 1,800 விநாயகர் சிலைகள் மட்டும் வைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.
4. விநாயகர் சதுர்த்தியையொட்டி, கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரம்
விநாயகர் சதுர்த்தியையொட்டி கோவையில் பூஜை பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.
5. ஊட்டியில் போலீசார் கொடி அணிவகுப்பு
விநாயகர் சதுர்த்தியையொட்டி ஊட்டியில் நேற்று போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.