வானவில் : கண்ணைக் கவரும் பிங்கர்ஸின் பவர் பேங்க்


வானவில் : கண்ணைக் கவரும் பிங்கர்ஸின் பவர் பேங்க்
x
தினத்தந்தி 21 Aug 2019 4:14 PM IST (Updated: 21 Aug 2019 4:14 PM IST)
t-max-icont-min-icon

நீண்ட நேரம் நீடித்து செயல்படும் பேட்டரியை கொண்ட ஸ்மார்ட் போனாக இருந்தாலும், பெரும்பாலானோர் பல்வேறு செயலிகளை பயன்படுத்துவதால், பேட்டரி விரைவில் தீர்ந்து போகும் நிலை உருவாகிறது. இதனாலேயே பலரும் பவர் பேங்கை கைவசம் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.

ஸ்மார்ட்போனுக்கே பல்வேறு கவர்களைப் போட்டு கண்ணைக் கவரும் வகையில் வைத்து பயன்படுத்தும் நிலையில் பவர் பேங்கையும் கண்ணைக் கவரும் வகையில் அழகிய பொம்மைகளின் தோற்றத்தை அச்சிட்டு சிறப்பாக வெளியிட்டுள்ளது பிங்கர்ஸ் நிறுவனம்.

இவை அனைத்தும் 5,000 எம்.ஏ.ஹெச். முதல் 10,000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்டவையாக வந்துள்ளன. இவற்றின் உயர்தரம் மிக்க பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், இவை சார்ஜ் ஏறும் அளவுக்கு முழுமையான மின் சக்தியை ஸ்மார்ட்போனுக்கு கடத்தும். எடை குறைவான பேட்டரியின் திறனை உணர்த்தும் மைக்ரோ யு.எஸ்.பி. போர்ட் மற்றும் டைப் சி போர்ட் ஆகியன விரைவாக சார்ஜ் ஆவதற்கு உதவும் வகையில் இதில் இடம்பெற்று உள்ளது.

Next Story