சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. வெளிநடப்பு

புதுவை சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி,
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதும் கவர்னர் கிரண்பெடி உரையாற்ற தொடங்கினார். அப்போது அ.தி.மு.க. சட்டமன்றகட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. எழுந்து அரசை விமர்சித்து பேசினார்.
ஆனால் அவரது மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது. இதைத்தொடர்ந்து சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறிவிட்டு கூட்ட அரங்கினை விட்டு வெளியேறினார். அவருடன் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இந்த வெளிநடப்புக்கான காரணம் குறித்து அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மற்றும் கவர்னரின் மலிவு விளம்பர போக்கினால் சட்டமன்ற விதிகள் காலில்போட்டு மிதிக்கப்பட்டு ஜனநாயகத்தை அரசு கேலிக்கூத்தாக்கியுள்ளது. மாநில வளர்ச்சியிலும், மக்கள்நலன் சார்ந்த நலத்திட்ட உதவிகளிலும், அரசு சார்பு நிறுவன ஊழியர்களின் சம்பள பிரச்சினையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மக்கள் விரோத ஆட்சி நடக்கிறது. எதற்கெடுத்தாலும் அரசியல் ரீதியில் மத்திய அரசின் திட்டங்களை கண்மூடித்தனமாக எதிர்த்து வருவதால் மாநில மக்களுக்கு மத்திய அரசின் திட்ட பயன்கள் சென்றடையவில்லை.
10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு 30 மாதமாக சம்பளம் இல்லை. பஞ்சாலை ஊழியர்களுக்கு 15 மாதமாக உதவித்தொகை இல்லை. ரேஷன் கடை ஊழியர்களுக்கு 1½ வருடங்களாக சம்பளம் இல்லை. பாசிக் ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி சொசைட்டி கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பல தரப்பினருக்கும் உயர்த்தப்பட்ட ஊதியம் வழங்கப்படவில்லை.
உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை. மீனவர் நலன் பாதுகாக்கப்படவில்லை. ரோடியர் போன்ற பஞ்சாலைகளை திறக்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. உயர்த்தப்பட்ட மின் கட்டண வரி, குப்பை வரி, வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர் வரி உள்ளிட்ட எந்த வரியும் குறைக்கப்படவில்லை. மக்களை பாதிக்கின்ற வகையில் ஏன் வரிகளை உயர்த்தினீர்கள்? என்று கேட்டால் கவர்னர் உயர்த்திவிட்டார் என்று அரசு கூறுகிறது. அதேசமயம் அறிவித்த திட்டங்களை ஏன் செயல்படுத்தவில்லை? என்று கேட்டால் கவர்னர் தடுக்கிறார் என்று முதல்-அமைச்சர் கூறுகிறார்.
இப்படியே தொடர்ந்து கவர்னரை மையப்படுத்தி 3 ஆண்டு காலத்தை காங்கிரஸ் அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தாமல் வீணடித்துள்ளது. அரசின் அனைத்து துறைகளிலும் ஊழலும், முறைகேடுகளும் நிறைந்துள்ளன. சட்டம், ஒழுங்கு என்பது அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. பொய்யான குற்றச்சாட்டை கடந்த 3 ஆண்டுகாலமாக காங்கிரஸ் அரசு கூறி மக்களை ஏமாற்றி வருகிறது.
இந்த ஆட்சியின் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. சபையை நடத்தும் சபாநாயகர் மீதும் எங்களுக்கு நம்பிக்கையில்லை. எனவே கவர்னரை குறைகூறி மக்கள் விரோத ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அரசை கண்டித்து வெளிநடப்பு செய்தோம்.
இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Related Tags :
Next Story