கிராமத்தில் புகுந்த மலைப்பாம்புகளை பிடித்து காட்டில் விட்ட மக்கள்

கிராமத்தில் புகுந்த மலைப்பாம்புகளை, கிராம மக்கள் பிடித்து அவற்றை காட்டுப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே பொன்னமராவதி செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் அமைந்துள்ளது பொதுப்பணி துறைக்கு சொந்தமான உபய கண்மாய். இங்கு சுற்று வட்டாரத்தை சேர்ந்த உலகம்பட்டி, புதுவாடி, ஆரணிபட்டி, எஸ்.புதூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்காக கொண்டு வருகின்றனர். அவ்வாறு வரும் ஆட்டு குட்டிகளை கண்மாயில் உள்ள முட்புதருக்குள் பதுங்கி இருக்கும் மலைப்பாம்புகள் விழுங்கி விடுகின்றன. மேய்ச்சலுக்கு வரும் ஆட்டு குட்டிகளை விழுங்கியவுடன் ஆள் நடமாட்டத்தை கண்டவுடன் விழுங்கிய குட்டியை கக்கி விட்டு புதருக்குள் சென்று விடுகின்றது.
இதனால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினர் மற்றும் வனத்துறையினர் மலைப்பாம்பை பிடிக்க மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். கடந்த 5 மாதத்திற்குள் மூன்று ஆட்டு குட்டிகளை விழுங்கியுள்ளது. இந்தநிலையில் 2 நாட்களுக்கு முன்பு புதுவாடி கிராமத்திற்குள் புகுந்த இரண்டு மலைப்பாம்புகள், 3 கோழிகளை விழுங்கியுள்ளன. இதனை பார்த்த கிராம மக்கள் 8 அடி நீளமுள்ள மலைப்பாம்புகளை பிடிக்க முயன்றனர். ஆனால் அவை வேகமாக புதர்களை நோக்கி சென்றன. உடனே கிராம மக்கள் அவற்றை விரட்டி சென்று பிடித்து, குறும்பூர் பகுதியில் உள்ள வீரமலை காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து புதுவாடி கிராம மக்கள் கூறுகையில், இந்த உபயகண்மாயில் முட்புதர்கள் அடர்ந்து உள்ளது. மேலும் செடி, கொடி வகைகள் அடர்ந்து காணப்படுவதால் மலைப்பாம்புகள் தங்குவதற்கு ஏற்ற இடமாக அமைந்துள்ளது. இங்கு பதுங்கும் மலைப்பாம்புகள் இரை தேடி மேய்ச்சலுக்கு வரும் ஆட்டு குட்டிகளை விழுங்கி விடுகின்றன.
அவ்வாறு கிடைக்காத பட்சத்தில் புதுவாடி கிராமத்திற்குள் புகுந்து விடுகின்றன. மேலும் பொதுப்பணி துறைக்கு சொந்தமான உபயகண்மாயில் உடனடியாக முட்புதர்களை அகற்ற அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும். மேலும் அடிக்கடி நடைபெறும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன்பு நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story