சென்னையில் 22,000 மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டம்

சென்னையில் 22,000 மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிடுள்ளது.
சென்னை,
சென்னை பெருங்களத்தூர்-மாதவரம் இடையே 32 கி.மீ நீளத்தில் 22,000 மரக்கன்றுகளை நட வனத்துறை திட்டமிட்டிருக்கிறது. முதல் கட்டமாக 1,200 மரக்கன்றுகளை நட இப்போதிலிருந்து பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து 22,000 மரக்கன்றுகள் அனைத்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் நடப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போது, மரக்கன்றுகளை நடும் முயற்சிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் வனத்துறை ரேஞ்சர் பி. கல்யாண், “மரக்கன்றுகளை நட்ட பிறகு, நாங்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மரக்கன்றுகள் அனைத்தையும் தண்ணீர் ஊற்றி பராமரிப்போம். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மரக்கன்றுகள் முழுமையாக வளர்ந்து நெடுஞ்சாலைக்கு ஒரு பசுமையையும், நிழலையும் வழங்குவதோடு ஒரு அழகான தோற்றம் அளிக்கும். இதைனையடுத்து, திருத்தணி-திருப்பதி சாலையில் மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளோம். ” என்று கூறினார்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) திட்டமான தங்க நாற்கரச் சாலை, 2003-ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்ட போது ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டப்பட்டது. சாலைப் பணிகள் முடிந்ததும் மரக்கன்றுகளை நடுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உறுதியளித்தது. ஆனால், பத்து வருடங்களுக்கு மேல் ஆகியும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நடபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story