கடையம், ஆலங்குளம் பகுதிகளில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு


கடையம், ஆலங்குளம் பகுதிகளில், குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு
x
தினத்தந்தி 12 Sept 2019 3:15 AM IST (Updated: 12 Sept 2019 4:06 AM IST)
t-max-icont-min-icon

கடையம், ஆலங்குளம் பகுதிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு செய்தார்.

கடையம்,

கடையம் யூனியன் ரவணசமுத்திரம் பஞ்சாயத்து பகுதியில் மாவட்ட கலெக்டர் ஷில்பா நேற்று ஆய்வு மேற்கொண்டார். ராமநதி ஆற்றங்கரையில் திரவ கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள கழிவு நீர் உறிஞ்சு குழிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சேர்வைகாரன்பட்டி பஞ்சாயத்து கட்டேறிபட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் தடுப்பணை கட்டும் பணிகளையும், வெங்காடம்பட்டி பஞ்சாயத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சிறுபாசன குளங்களில் நடைபெற்று வரும் மராமத்து பணிகளையும் அவர் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் பழனி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு திட்டம்) நியூட்டன், கடையம் யூனியன் ஆணையாளர் முருகையா, வட்டார வளர்ச்சி அலுவலர் பழனிவேல், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாரியப்பன், தங்கராஜ், சுப்புலட்சுமி, பிரபாகரன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஜான் சுகிர்தராஜ், சுப்பிரமணியன், ஊராட்சி செயலர்கள் மாரியப்பன், கதிரேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதேபோல் ஆலங்குளம் யூனியன் ஊத்துமலை மற்றும் காவலாகுறிச்சி குளங்களில் தலா ரூ.30 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகளை கலெக்டர் ஷில்பா ஆய்வு செய்தார். மேலும் அங்கு வந்த விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். தாசில்தார்கள் கந்தப்பன் (ஆலங்குளம்), ஹரிகரன் (வீரகேரளம்புதூர்), பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் அபதுல்ரகுமான் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story