மாவட்ட செய்திகள்

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு + "||" + Thamirabarani submerged in the river 2 people die

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு

தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் சாவு
நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்தனர்.
நெல்லை, 

நெல்லை தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 2 பேர் இறந்தனர்.

தொழிலாளி

நெல்லை வண்ணார்பேட்டை பகுதியில் உள்ள தாமிரபரணி ஆற்றில் நேற்று முன்தினம் மாலை ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், நெல்லை வண்ணார்பேட்டை கம்பராமாயண தெருவை சேர்ந்த தொழிலாளியான மாரிமுத்து (வயது 42) என்பதும், ஆற்றில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்

நெல்லை சந்திப்பு தாமிரபரணி ஆற்றில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு வாலிபர் பிணமாக மிதந்தார். அந்த வாலிபர் பச்சை கலர் சட்டையும், கழுத்தில் டாலரும், ஒரு கயிறும் அணிந்து இருந்தார். சம்பவ இடத்துக்கு நெல்லை சந்திப்பு போலீசார் சென்று, உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அவர், பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரை சேர்ந்த முருகன் மகன் கணேசன் (32) என்றும், அவர் குளிக்க சென்ற போது வலிப்பு நோய் ஏற்பட்டு ஆற்றில் மூழ்கி இறந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.