மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு பதிவாளர் தகவல்


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிப்பு பதிவாளர் தகவல்
x
தினத்தந்தி 16 Sept 2019 3:30 AM IST (Updated: 16 Sept 2019 2:41 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தில் மாணவர் சேர்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கை நீட்டிப்பு

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தில் 2019-2020 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை பல்கலைக்கழக மானிய குழுவின் தொலைதூரக்கல்விக்குழு அனுமதியுடன் நடைபெற்று வருகிறது.

நெல்லை அபிஷேகபட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகம், நாகர்கோவில் மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக் கல்லூரி வளாகம், சேரன்மாதேவி கோவிந்தபேரி, புளியங்குடி, திசையன்விளை, பணகுடி, கடையநல்லூர், சங்கரன்கோவில், நாகலாபுரம், நாகம்பட்டி மற்றும் கன்னியாகுமரி பால்குளம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளில் தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தின் நேரடி சேர்க்கை மையங்களிலும், இப்பல்கலைக்கழக தொலைநெறி தொடர் கல்வி இயக்ககத்தின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளிலும் கணினி வாயிலான மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயன்பெற வேண்டும்

மேலும் பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி வாயிலாக பயில விரும்பும் தமிழ்நாட்டின் அனைத்து பகுதியில் உள்ள விண்ணப்பதாரர்களும் இப்பல்கலைக்கழக இணையதளத்தின் வாயிலாக தாங்களே நேரடியாக விண்ணப்பித்து ( https://www.msuniv.ac.in/ Distance Education ) சேர்க்கை பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி பல்கலைக்கழக தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் இளநிலை, முதுநிலை, சான்றிதழ், பட்டய படிப்புகளில் சேர்ந்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story