கும்மிடிப்பூண்டி அருகே கடையின் சுவரில் துளை போட்டு ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு


கும்மிடிப்பூண்டி அருகே கடையின் சுவரில் துளை போட்டு ரூ.2 லட்சம் செல்போன்கள் திருட்டு
x
தினத்தந்தி 26 Sep 2019 10:00 PM GMT (Updated: 26 Sep 2019 7:07 PM GMT)

கும்மிடிப்பூண்டி அருகே கடையின் சுவரில் துளை போட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் ரெயில் நிலையம் அருகே வசித்து வருபவர் பீட்டர் (வயது 50). இவர் ஆரம்பாக்கம் பஜாரில் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் அருகே செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் பீட்டர் கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் பின்பக்க சுவர் துளை போடப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைத்தார்.

நள்ளிரவில் கடையின் பின் பக்க சுவரை கடப்பாரை கொண்டு துளை போட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள 20 செல்போன்களை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. கடந்த ஒரு ஆண்டில் மேற்கண்ட செல்போன் கடையில் 3-வது முறையாக திருட்டு சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடையின் சுவரில் துளை போட்டு செல்போன்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Next Story