நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை


நாமக்கல் உழவர் சந்தையில் ரூ.8½ லட்சத்துக்கு காய்கறிகள் விற்பனை
x
தினத்தந்தி 30 Sept 2019 3:30 AM IST (Updated: 30 Sept 2019 2:13 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று 26½ டன் காய்கறிகள் சுமார் ரூ.8½ லட்சத்துக்கு விற்பனையானது.

நாமக்கல், 

நாமக்கல் - கோட்டை சாலையில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு நாமக்கல், எருமப்பட்டி, மோகனூர், புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளையும் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இந்த சந்தைக்கு விடுமுறை நாளான நேற்று 26½ டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்து இருந்தன. இந்த காய்கறிகள் ரூ.8 லட்சத்து 45 ஆயிரத்து 730-க்கு விற்பனை செய்யப்பட்டன. இவற்றை 6 ஆயிரத்து 655 பேர் வாங்கி சென்றனர்.

நாமக்கல் உழவர் சந்தையில் நேற்று தக்காளி கிலோ ரூ.26-க்கும், கத்தரி ரூ.44-க்கும், வெண்டை ரூ.24-க்கும், புடலங்காய் ரூ.24-க்கும், பீர்க்கன் ரூ.40-க்கும், கேரட் ரூ.56-க்கும், பீட்ரூட் ரூ.48-க்கும், பீன்ஸ் ரூ.44-க்கும், இஞ்சி ரூ.60-க்கும், காளான் கிலோ ரூ.175-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30-க்கும், பெரிய வெங்காயம் கிலோ ரூ.54-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

புரட்டாசி மாதம் தொடங்கி இருப்பதால் இந்துக்கள் விரதம் கடைபிடித்து வருகின்றனர். இதனால் உழவர் சந்தைக்கு வழக்கத்தை காட்டிலும் காய்கறிகள் வரத்து அதிகரித்து இருப்பதாகவும், அதன் விலையும் 5 முதல் 10 சதவீதம் வரை உயர்ந்து இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story