கோடிகளை கொட்டி அ.தி.மு.க.-தி.மு.க. இடைத்தேர்தலை சந்திக்கிறது - சீமான் குற்றச்சாட்டு

அ.தி.மு.க.-தி.மு.க.கோடிகளை கொட்டிஇடைத்தேர்தலை சந்திப்பதாகநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டினார்.
பீளமேடு,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றுகாலை சென்னையில்இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் விமான நிலையத்தில்நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தை ஆண்ட கட்சிகள், தமிழுக்காக என்ன செய்தார்கள்? என்று கேள்வி எழுப்பினால் பதில் கிடையாது.குரூப்-2 தமிழ் பாடம்நீக்கம் குறித்து முன்னாள் மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறும்போது தமிழகத்தை இதுவரை ஆண்ட கட்சிகள் தான்,இதற்கு காரணம்என்றார். அதுஉண்மை தான். இதுவரை அவர்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? என்று கேட்டால், அதற்கும் பதில் கிடையாது.கோவை தடாகம்பகுதியில் 75 அடி ஆழத்துக்கு மட்டுமே மண்எடுப்பதற்கு தமிழகஅரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம்அனுமதி கொடுத்துஉள்ளது. ஆனால் தனியார் நிறுவனம் 75 அடிக்கும்கீழ் பூமியைதோண்டிமண் எடுத்து வருகிறது. இதற்கு மாநில அரசு உடந்தையாக உள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
விளைநிலங்கள் வழியாக உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு, விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி உள்ளனர். இந்த உயர் அழுத்த மின் கோபுரம் வழியாகமின்சாரத்தை கொண்டு செல்லாமல்தேசிய நெடுஞ்சாலை வழியாக மின் கம்பி மூலம்மின்சாரத்தை கொண்டு சென்றால், தமிழக அரசுக்குரூ.42 கோடி வருமானம் கிடைக்கும்.இதுதொடர்பாக கேள்விஎழுப்பினால் அதற்கும் பதில் கிடையாது.
வெளிநாடுகளில்காய்கறி கழிவுகள்மற்றும் குப்பைகளில் இருந்து மீத்தேன் எடுக்கிறார்கள். ஆனால் நமது நாட்டில் ஏன் இப்படி செயல்படவில்லை? என்று கேட்க தோன்றுகிறது.
ரஜினி, கமல் ஆகியோர் அரசியலுக்குவருவதை தவிர்க்கவேண்டும் என்று நடிகர் சிரஞ்சீவி கூறுகிறார். அதனை நான்வரவேற்கிறேன். அரசியலில் பணபலம்தான் ஜெயிக்கும் என்ற நடிகர் சிரஞ்சீவியின் கருத்து சரி என்று ஒப்புக்கொள்கிறேன்.
பேனர் விழுந்துசென்னை பெண்என்ஜினீயர் இறந்த சம்பவத்துக்கு நான் ஆழ்ந்தஇரங்கலை தெரிவிக்கிறேன். தமிழக அரசுஇதற்கு கடுமையானசட்டம் விதிக்க வேண்டும். தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பேனர் கலாசாரத்துக்குஅடிப்படையாக செயல்பட்டுவந்தன. ஆனால் இனிவரும் காலத்தில் அவர்கள் தான் பேனர் கலாசாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும். தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி போட்டியிடுகிறது. ஆனால் அ.தி.மு.க.-தி.மு.க.கோடிகளை கொட்டிஇடைத்தேர்தலை சந்திக்கிறது.
நாங்கள் கொள்கையை மட்டுமேநம்பி தேர்தலில்போட்டியிடுகிறோம். தற்போது தேர்தல்என்பது பெரும்முதலீடு செய்துஅதிகளவில்வருமானத்தை குவிக்கும்ஒரு தொழிலாக மாறிவிட்டது. இதில் நியாயம், தர்மத்தை எதிர்பார்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story