காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள்: காங்கிரசார் ஊர்வலமாக வந்து, சிலைக்கு மாலை அணிவிப்பு


காந்தி பிறந்தநாள், காமராஜர் நினைவு நாள்: காங்கிரசார் ஊர்வலமாக வந்து, சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 2 Oct 2019 11:00 PM GMT (Updated: 2 Oct 2019 8:08 PM GMT)

காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாளையொட்டி, அவர்களுடைய சிலைக்கு காங்கிரசார் ஊர்வலமாக வந்து மாலை அணிவித்தனர்.

திருச்சி,

தேசப்பிதா காந்தியடிகள் பிறந்தநாள் மற்றும் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு நாளையொட்டி திருச்சியில் அரசியல் கட்சியினர் அவர்களுடைய சிலைக்கு மாலை அணிவித்தனர். இதில் காந்தி ஜெயந்தியையொட்டி, திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அருணாசலம் மன்றத்தில் இருந்து ஊர்வலமாக காந்தி மார்க்கெட் நோக்கி வந்தனர். ஊர்வலத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் பொருளாளர் ராஜாநசீர், பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

ஊர்வலம் காந்தி மார்க்கெட்டை வந்தடைந்ததும் அங்கு, காந்தி உருவச்சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். முன்னதாக காங்கிரசார், காமராஜர் நினைவு நாளையொட்டி, சத்திரம் தண்ணீர் தொட்டி அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

த.மா.கா- விடுதலை சிறுத்தைகள் கட்சி

திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர்கள் நந்தா செந்தில்வேல், குணா மற்றும் நிர்வாகிகள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினர். இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாநில துணை செயலாளர் பிரபாகரன் தலைமையில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்தனர்.

திருச்சி புத்தூரில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் திருச்சியில் உள்ள பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். உய்யகொண்டான் திருமலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான ஆர்.சி. நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் காந்தி வேடமிட்டு, ராட்டையில் நூல் நூற்று, காந்தி பிறந்த நாளை கொண்டாடினர்.

மணப்பாறை

திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், மாவட்ட தலைவர் வக்கீல் கோவிந்தராஜன் தலைமையில் மணப்பாறையில் பாதயாத்திரை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டவர்கள், வேனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காந்தி உருவப்படத்துடன், அவரது போதனைகளை ஒலிப் பெருக்கி மூலம் எடுத்துக்கூறிக் கொண்டே காந்தி சிலையை அடைந்தனர். பின்னர் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதைத்தொடர்ந்து காந்தியின் சிந்தனைகளை பரப்புகின்ற வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், நம்பர்-1 டோல்கேட் ரவுண்டானா அருகே உள்ள காந்தி சிலைக்கு வடக்கு மாவட்ட தலைவர் கலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மலர்தூவி மரியாதை

திருச்சி புத்தூரில் உள்ள காந்தி அஸ்தி மண்டபத்தில் அறம் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் டாக்டர் ராஜா, மாநில பொதுச்செயலாளர் எஸ்.ஆர்.கே.ரமேஷ்குமார் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அப்போது மாநில துணைத்தலைவர் சாகுல்அமீது மற்றும் இளங்கோவன் ஆகியோர் உடன் இருந்தனர்.

காந்தியடிகள் பிறந்தநாளையொட்டி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் சின்னசாமி நகரில் தெரு முனை பிரசார கூட்டம் நடந்தது.

Next Story