மாவட்ட செய்திகள்

வெவ்வேறு இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை + "||" + Three students, including an engineering student, committed suicide in different places

வெவ்வேறு இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை

வெவ்வேறு இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் தற்கொலை
வெவ்வேறு இடங்களில் என்ஜினீயரிங் மாணவர் உள்பட 3 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
ஓசூர்,

ஓசூர் நெசவாளர் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 21). தனியார் கல்லூரியில் பி.இ. இறுதி ஆண்டு படித்து வந்தார். இவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ராஜசேகர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


போலீசார் விசாரணை

ஊத்தங்கரை அருகே உள்ள வீரியம்பட்டியை சேர்ந்தவர் மோகன்குமார். இவரது மனைவி சண்முகபிரியா (29). இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி விசாரணை நடத்தி வருகிறார்.

அஞ்செட்டி அருகே உள்ள மரியாளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சசிகலா (32). இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்த சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அஞ்செட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டுரங்கன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தொடர்புடைய செய்திகள்

1. மனைவி பிரிந்து சென்றதால் புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை தக்கலை அருகே பரிதாபம்
தக்கலை அருகே மனைவி பிரிந்து சென்றதால், புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
2. பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
ஓமலூர் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிக்கிய விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
3. வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறையில், வேலை கிடைக்காத விரக்தியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
4. ரெயில் முன் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
பணகுடி அருகே தேர்வில் தோல்வி அடைந்ததை பெற்றோர் கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
5. மாதவரம் அருகே இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; தற்கொலைக்கு முயன்ற கணவர் ஆஸ்பத்திரியில் அனுமதி
இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், மதுவில் டீசல் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆசிரியரின் தேர்வுகள்...