அடப்பன்வயலில் தொழிலாளி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


அடப்பன்வயலில் தொழிலாளி வெட்டிக்கொலை மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 15 Oct 2019 3:45 AM IST (Updated: 15 Oct 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அடப்பன்வயலில் தொழிலாளியை வெட்டிக்கொலை செய்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அடப்பன்வயல் 3-ம் வீதியை சேர்ந்தவர் ராஜரெத்தினம். இவரது மகன் வினோத் சக்கரவர்த்தி (வயது 35). தொழிலாளியான இவர், நேற்று இரவு தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் சிலர் அரிவாளால் வினோத் சக்கரவர்த்தியை பயங்கரமாக வெட்டி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த வினோத்சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து புதுக்கோட்டை திருக்கோகர்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வினோத்சக்கரவர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, வினோத்சக்கரவர்த்தியை அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். வெட்டி கொலை செய்யப்பட்ட வினோத்சக்கரவர்த்தி, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளர் அன்பானந்தத்தின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை அடப்பன்வயலில் வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் நேற்று இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story