வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பு; 6 மீனவர்கள் கைது

வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருவதையொட்டி ஆட்கள் நடமாட்டமின்றி கடற்கரை வெறிச்சோடி காணப்படுகிறது. மோதலில் ஈடுபட்டதாக 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியாங்குப்பம்,
புதுச்சேரி அருகே உள்ள வீராம்பட்டினம், தமிழக பகுதியான நல்லவாடு ஆகிய கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு இடையே சுருக்கு வலை போட்டு மீன்பிடிப்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வரு கிறது. கடந்த 14-ந் தேதி மீண்டும் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து பயங்கர ஆயுதங்களுடன் நடுக்கடலில் மோதிக் கொண்டனர். இதில் இருதரப்பிலும் படகுகள் சேதமாயின.
ஏற்கனவே பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் எச்சரித்த போதிலும் அதையும் மீறி மீனவர்கள் மோதிக் கொண்டதால் வேறுவழியின்றி போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். மீனவர்கள் மோதிக் கொண்டதிலும், துப்பாக்கி சூட்டிலும் இரு கிராமங்களையும் சேர்ந்த 6 பேர் படுகாய மடைந்தனர்.
இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து மோதல் ஏற்படாமல் தடுக்க நல்லவாடு, வீராம்பட்டினம் கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. கைது நடவடிக்கைக்கு பயந்து ஆண்கள் தலைமறைவாகி விட்டனர். இதனால் இரு கிராமங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன. கடற்கரை பகுதியும் ஆட்கள் நடமாட்டத்தை காண முடியவில்லை.
வீராம்பட்டினம், நல்லவாடு கிராமங்களில் தொடர்ந்து 3-வது நாளாக பதற்றம் நீடித்து வருகிறது. வீராம்பட்டினத்தில் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன் தலைமையில், நல்லவாடு கிராமத்தில் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி தலைமையிலும் போலீசார் ரோந்து சென்று வருகிறார்கள்.
மீனவர்களிடையே அமைதியை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி கலெக்டர் அருண் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் பங்கேற்பது குறித்து மீனவர்கள் தரப்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் வீராம்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் ஸ்டாலின் (வயது 28), கார்த்திகேயன் (44), விஜய் (32), வர்மா (22), ஆனந்தன் (32), குகேஷ் (22) ஆகியோர் காலாப்பட்டு பகுதியில் பதுங்கி இருந்துள்ளனர். இதுபற்றி தகவல் தெரிந்து இவர்கள் 6 பேரையும் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி, சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜன், இளங்கோ மற்றும் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story