இதய அறுவை சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாததால் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர் உயிரிழந்த பரிதாபம்

மும்பையை சேர்ந்த முதியவர் முரளிதர் (வயது70). இவர் முல்லுண்டில் உள்ள பி.எம்.சி. வங்கியில் சில லட்சம் பணத்தை டெபாசிட் செய்திருந்தார். இந்தநிலையில் முரளிதருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பதறிப்போன குடும்பத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
மும்பை,
டாக்டர்கள் அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர். இதைத்தொடர்ந்து முரளிதருக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யவேண்டும் எனவும், அதற்காக ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் செலவாகும் என டாக்டர்கள் அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து முரளிதரின் குடும்பத்தினர் அவர் கணக்கு வைத்துள்ள பி.எம்.சி. வங்கிக்கு சென்று வங்கி மேலாளரை சந்தித்து, தங்களின் நிலைமையை எடுத்து கூறி அவசரமாக பணம் தேவைப்படுவதாக தெரிவித்தனர். ஆனால் ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு காரணமாக அவர்களுக்கு வெறும் ரூ.40 ஆயிரம் மட்டுமே கிடைத்தது.
இதனால் முரளிதருக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை நடத்த முடியாமல் போனது. இந்தநிலையில் நேற்று முரளிதர் மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் பி.எம்.சி. வங்கி வாடிக்கையாளர்கள் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்து உள்ளது.
Related Tags :
Next Story