நங்கவள்ளி அருகே, கிணற்றில் மூழ்கி மாணவன் பலி


நங்கவள்ளி அருகே, கிணற்றில் மூழ்கி மாணவன் பலி
x
தினத்தந்தி 21 Oct 2019 4:00 AM IST (Updated: 21 Oct 2019 2:09 AM IST)
t-max-icont-min-icon

நங்கவள்ளி அருகே கிணற்றில் மூழ்கி 8-ம் வகுப்பு மாணவன் பலியானான்.

மேச்சேரி,

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே பெரியசோரகை ஊராட்சி பூமிரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன். இவருடைய மகன் சண்முக பிரியன் (வயது 13).

இவன், சீரங்கனூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை என்பதால் பெரியசோரகைக்கு தனது நண்பர்களுடன் சென்றான்.

அங்குள்ள ஒரு கோவில் கிணற்றில் நண்பர்களுடன் சேர்ந்து அவன் நீச்சல் பழகி உள்ளான். அப்போது எதிர்பாராதவிதமாக கிணற்றில் மூழ்கி இறந்து விட்டான்.

இதை பார்த்த அவனுடைய நண்பர்கள் மற்றும் அங்கு இருந்தவர்கள், உடனடியாக நங்கவள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கிணற்றில் மூழ்கி பலியான மாணவனின் உடலை மீட்டனர்.

இந்த சம்பவம் குறித்து நங்கவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, இறந்த மாணவனின் உடலை கைப்பற்றி மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நண்பர்களுடன் நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி பலியான பரிதாப சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story