சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Oct 2019 4:30 AM IST (Updated: 26 Oct 2019 3:44 AM IST)
t-max-icont-min-icon

சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

மும்பை, 

சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட 3 வாலிபர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி மும்பை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சிறுவனுடன் தகாத உறவு

மும்பை காந்திவிலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 14 வயது சிறுவன் பெற்றோருடன் வசித்து வந்தான். இந்த சிறுவனை கடந்த 2013-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த விக்கி (வயது27) என்ற வாலிபர் அந்த பகுதியில் உள்ள பூங்கா காவலாளி அறைக்கு அழைத்து சென்றார்.அங்கு விக்கி மற்றும் அவரது நண்பர்கள் சுனில் (27), தீபக் (29) ஆகிய 3 பேரும் சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்டனர்.

10 ஆண்டு கடுங்காவல்

இதுபற்றி அறிந்த சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 வாலிபர்களையும் கைது செய்தனர்.

இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுவனுடன் தகாத உறவில் ஈடுபட்ட 3 வாலிபர்களுக்கும் 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது.

Next Story