மாவட்ட செய்திகள்

சட்டப்பேரவை கட்டிடத்தில் சூரியஒளி மின்சக்தி நிலையம் + "||" + At the Assembly Building Solar Power Station

சட்டப்பேரவை கட்டிடத்தில் சூரியஒளி மின்சக்தி நிலையம்

சட்டப்பேரவை கட்டிடத்தில் சூரியஒளி மின்சக்தி நிலையம்
புதுச்சேரி சட்டப் பேரவை கட்டிடத்தில் ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் செலவில் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,

சோலார் சிட்டி துறையின் கீழ் புதுவை மாநிலத்தில் 22 அரசு துறை கட்டிடங்களின் மேற்கூரையை பயன்படுத்தி சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி முதல் கட்டமாக சட்ட பேரவை வளாகத்தில் உள்ள கட்டிடத்தின் மீது ரூ.11 லட்சத்து 32 ஆயிரம் செலவில் 20 கிலோ வாட் சூரிய ஒளி மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது.


இதன் திறப்பு விழாவுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமை தாங்கினார். சபாநாயகர் சிவக்கொழுந்து சூரிய ஒளி மின்சக்தி நிலையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், கோகுலகிருஷ்ணன், துணை சபாநாயகர் எம்.என்.ஆர்.பாலன், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த சூரிய ஒளி மின்சக்தி நிலையம் மூலம் நாள் ஒன்றுக்கு 100 யூனிட்டுகள் வீதம் ஆண்டுக்கு 30 ஆயிரம் யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என கணக்கிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் சேமிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.