மாவட்ட செய்திகள்

பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல் + "||" + Farmers' Union meeting urged to implement textile park project in Patalloor

பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
பாடாலூரில் ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் துறைமங்கலத்தில் நடந்தது. இதற்கு சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில செயலாளர் சாமி நடராஜன், மாநிலக்குழு முடிவுகள் குறித்தும், மாவட்ட செயலாளர் செல்லதுரை விவசாயிகள் பிரச்சினைகள் குறித்தும் மற்றும் எதிர்கால போராட்டங்களில் பங்கேற்பது குறித்தும் பேசினர். கூட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், மாவட்டத்தில் உள்ள 73 ஏரிகளில் 3 ஏரிகள் மட்டுமே நிரம்பியுள்ளதால், முறையாக குடிமராமத்து பணிகளை மேற்கொண்டு ஏரிகள், வரத்து வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறப்பு பொருளாதார மண்டலத்துக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளின் பெயருக்கே மாற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ஜவுளி பூங்கா திட்டத்தை...

வேப்பந்தட்டை தாலுகா சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விவசாயிகளை ஒன்றிணைத்து டிசம்பரில் போராட்டத்தில் ஈடுபடுவது. பாடாலூரில் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்கா திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு உத்தரவுப்படி லிட்டருக்கு ரூ.4 பால் கொள்முதல் விலை உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிவித்த பரிந்துரை விலை ரூ.32 கோடியை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முடிவில் துணை செயலாளர் சின்னசாமி நன்றி கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா விதியை மீறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்கு
கொரோனா விதியை மீறி கூட்டத்தை கூட்டியதாக பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
2. மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் குப்பைகளை அகற்றுவது குறித்து கடைக்காரர்களுடன் ஆலோசனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் மக்கும், மக்காத குப்பைகளை தரம்பிரித்து அகற்றுவது குறித்த ஆலோசனை கூட்டம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்தில் நடைபெற்றது.
3. கடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம்
கடலூர் மாவட்டத்தில் காணொலி காட்சி மூலம் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது.
4. புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அலைமோதியது
புரட்டாசி மாதம் தொடங்கினாலும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. இறைச்சி கடைகளில் வழக்கத்தைவிட கூட்டம் சற்று குறைந்திருந்தது.
5. புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை: குமரி பெருமாள் கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.