காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா


காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவில் தெப்பத்திருவிழா
x
தினத்தந்தி 21 Nov 2019 11:51 PM GMT (Updated: 21 Nov 2019 11:51 PM GMT)

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா தொடங்கியது.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கச்சபேஸ்வரரும், சுந்தராம்பிகையும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவையொட்டி பரதநாட்டிய கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. விழாவில் கோவில் நிர்வாக அலுவலர் குமரன், குமர கோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் தியாகராஜன், கோவில் மேலாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோவில் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

தெப்பத்திருவிழா இன்றும் நடக்கிறது.

Next Story