குழித்துறையில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது


குழித்துறையில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 Dec 2019 4:30 AM IST (Updated: 2 Dec 2019 3:38 AM IST)
t-max-icont-min-icon

குழித்துறையில் போக்குவரத்து போலீசாரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

களியக்காவிளை,

களியக்காவிளையை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 45). இவர் மார்த்தாண்டம் போலீஸ்நிலைத்தில் போக்குவரத்து தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை குழித்துறை சந்திப்பில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வாலிபர் டீ கேன்களுடன் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டிருந்தார். அங்கு பணியில் இருந்த ராஜேஷ், அந்த வாலிபரை ஒதுங்கி நிற்குமாறு கூறினார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வாலிபர், ராஜேசை சரமாரியாக தாக்கினார்.

வாலிபர் கைது

இதுகுறித்து ராஜேஷ் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியை சேர்ந்த மைக்கேல் சார்லஸ்(27), ரெயிலில் டீ விற்பவர் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ராேஜஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைக்கேல் சார்லசை கைது செய்தனர்.


Next Story