மாவட்ட தலைநகரான பின்னரும் அவலம்; ராணிப்பேட்டையில் திறக்கப்படாத ரெயில் நிலையம் - நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் முகமதுஜான் எம்.பி.வலியுறுத்தல்


மாவட்ட தலைநகரான பின்னரும் அவலம்; ராணிப்பேட்டையில் திறக்கப்படாத ரெயில் நிலையம் - நடவடிக்கை எடுக்க மத்திய மந்திரியிடம் முகமதுஜான் எம்.பி.வலியுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 12:56 PM GMT)

ராணிப்பேட்டை மாவட்ட தலைநகரான பின்னரும் ரெயில் நிலையம் பூட்டியே கிடக்கிறது. எத்தனையோ ரெயில்கள் இந்த வழியாக சென்றும் ரெயில் நிலையம் பயனற்று கிடப்பதால் அதனை உடனே திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய ரெயில்வே மந்திரியிடம் முகமதுஜான் எம்.பி.மனு அளித்துள்ளார்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

வேலூர் மாவட்டத்தை பிரித்து ராணிப்பேட்டை புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்ட அளவிலான அரசு தலைமை அலுவலகங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த ராணிப்பேட்டை வழியாக சென்னை- சேலம்- பெங்களூரு இரட்டை ரெயில்பாதை அமைந்துள்ளது.

ஆனால் ராணிப்பேட்டையில் ரெயில் நிலையம் இருந்தும் திறக்கப்படாததால் பயனற்று கிடக்கிறது. இந்த மாவட்டத்தின் எல்லை அரக்கோணம் வரை உள்ளது. அங்கிருந்து பஸ்சில் வருவதற்கு 2 மணி நேரம் வரை ஆகிறது. அதே நேரத்தில் ராணிப்பேட்டையில் ரெயில் நிலையத்தை திறந்தால் தொலைதூரத்திலிருந்து வரும் பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உத்தரவுப்படி அ.தி.மு.க.வின் சிறுபான்மையினர் நல பிரிவு மாநில இணை செயலாளர் முகம்மதுஜான்.எம்.பி.,நேற்று முன்தினம் புதுடெல்லியில் மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ்கோயலை சந்தித்தார். அப்போது அவர் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.

அதில் ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தை திறப்பு விழா செய்து ரெயில்களை இயக்க வேண்டும், வாலாஜா ரோடு ரெயில் நிலைய பிளாட்பாரத்தை நீட்டிக்க வேண்டும், விரைவு ரெயில்களான ‘டபுள்டெக்கர்’, ஷீரடி- சென்னை, சென்னை- பழனி- பாலக்காடு, சென்னை- திருவனந்தபுரம் ஆகிய ரெயில்கள் வாலாஜா ரோடு ரெயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும், வாலாஜா ரோடு ரெயில் நிலையத்திலிருந்து அரக்கோணம் மற்றும் சென்னைக்கு பாசஞ்சர் ரெயில்களை இயக்க வேண்டும் என ஏற்கனவே மனு அளித்துள்ளேன். எனவே இந்த பிரச்சினையில் விரைந்து நடவடிக்கை எடுத்து ராணிப்பேட்டை ரெயில் நிலையத்தை திறப்பதோடு,

இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

அவருடன் மேல்விஷாரம் நகர செயலாளர் இப்ராகிம் கலிலுல்லா, ராணிப்பேட்டை நகர எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி செயலாளர் முகம்மது உமர்பாரூக் ஆகியோர் சென்றனர்.

Next Story