குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து இஸ்லாமிய இயக்கங் களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை வட்டார ஜமாத் கூட்டமைப்பு தலைவர் அப்துல்ஹமீது தலைமை தாங்கினார். நாகை மாவட்ட ஜமாத்துல் உலமாசபை தலைவர் பஹ்ருதீன், த.மு.மு.க. பொதுச் செயலாளர் ஹாஜாகனி, எஸ்.டி.பி.ஐ. மாநில செயலாளர் அபுபக்கர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி மாநில பொருளாளர் ஹாருன்ரஷித், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய இளைஞர் அணி செயலாளர் அல் அமீன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குடியுரிமை திருத்த சட்டம்
ஆர்ப்பாட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும். 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு குடியுரிமை மறுக்கப்பட்டிருப்பதை கண்டித்தும். குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றிய மத்திய அரசு, அதற்கு துணைபோன மாநில அரசு ஆகியவற்றை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் நிவேதா முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், த.மு.மு.க. மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், மாவட்ட செயலாளர் முகமதுஜுபைர் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் தேசியக்கொடியை கையில் ஏந்தி கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story