குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சி காந்தி மார்க்கெட் கடையடைப்பால் பாதிப்பு இல்லை
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சி காந்தி மார்க்கெட் கடையடைப்பு போராட்டத்தால் பாதிப்பு ஏதும் இல்லை. சில்லறை காய்கறி மற்றும் மளிகைக்கடைகளில் வியாபாரம் வழக்கம்போல நடந்தது.
திருச்சி,
இந்திய மக்களை இனரீதியாகவும், மதரீதியாகவும் பிரிக்கும் சூழ்ச்சியாக, குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பபெறக்கோரி திருச்சி காந்தி மார்க்கெட்டில் இயங்கும் மாநகராட்சி அனுமதி பெற்ற தரைக்கடை மற்றும் நிலையான கடை வியாபாரிகள் ஒற்றுமை சங்கம், கிழங்கு, மாங்காய், காய்கனிகள் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம், அனைத்து வியாபாரிகள் பொதுநலச்சங்கம், எலுமிச்சை வியாபாரிகள் சங்கம் ஆகியன இணைந்து நேற்று ஒருநாள் கடையடைப்பு நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
அதே வேளையில் இந்திய மக்களை மத, இனரீதியாக பிரிவினை உண்டாக்கும் வகையில் தன்னிச்சையாக முடிவெடுக்கும் அமைப்புகளை கண்டிப்பதாகவும், எனவே நேற்று கடைகள் வழக்கம்போல செயல்படும் எனவும் மற்றொரு சங்கத்தினர் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். இந்த அறிவிப்பில் கடையடைப்பு நடத்துவதாக தெரிவித்த சங்கங்களும் இடம் பெற்றிருந்தது. இதனால், கடையடைப்பு நடக்குமா? நடக்காதா? என்ற சந்தேகமும் குழப்பமும் பெரும்பாலான வியாபாரிகள் இடையே ஏற்பட்டது.
கடைகள் அடைப்பு-திறப்பு
இந்த நிலையில் நேற்று காந்தி மார்க்கெட் நெல்பேட்டை சந்தையில் உள்ள பழக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதுபோல காந்தி சந்தை வடக்கு நுழைவு வாயில் பகுதியில் உள்ள மாங்காய் கடைகள், பழக்கடைகள், தக்காளி கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 50 சதவீத கடைகள் மூடப்பட்டிருந்தன.
அதே வேளையில் காந்தி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிகமாக காய்கறிகள் வாங்கும் சில்லறை காய்கறி கடைகள், மளிகைக்கடைகள், பூ வியாபார கடைகள் உள்ள பெரும்பாலான கடைகள் வழக்கம்போல திறந்திருந்தன. அந்த கடைகளில் வழக்கத்தைவிட அதிகமான நுகர்வோர்கள் காய்கறி உள்ளிட்ட வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றதை காணமுடிந்தது. இதுபோல, காந்தி மார்க்கெட்டின் வெளிப்புறத்தில் திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு வியாபாரம் ஜரூராக நடந்தது. குறிப்பாக சில்லரை தக்காளி வியாபாரம், மல்லி, புதினா, கறிவேப்பிலை வியாபாரிகள், பூ வியாபாரிகள், டீக்கடை, டிபன் கடை வியாபாரிகள், மளிகை வியாபாரிகள் கடைகளை அடைக்காமல் வழக்கம்போல வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மூட்டைகள் வந்திறங்கின
மேலும் காந்தி மார்க்கெட்டுக்கு வழக்கம்போல வெளிமாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லாரிகளில் வந்த காய்கறிகளை மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் இறக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஒரு தரப்பினரின் கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு தரப்பினரின் கடைகள் திறந்து வியாபாரம் நடந்ததாலும் எவ்வித பாதிப்பும் இல்லை.
இது குறித்து வியாபார சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில்,‘‘காந்தி மார்க்கெட்டில் கடையடைப்பு போராட்டம் தொடர்பாக வியாபாரிகள் இடையே முழுமையான புரிதல் இல்லை. காந்தி மார்க்கெட்டில் இந்து, முஸ்லிம் என அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம். கடையடைப்பு போராட்டத்தை ஆதரிப்பவர்கள் கடைகளை மூடி இருக்கிறார்கள். கடையடைப்பு தேவையில்லை என்பவர்கள், பொதுமக்கள் நலன்கருதி வழக்கம்போல கடைகளை திறந்திருக்கிறார்கள். இஸ்லாமிய சகோதரர்கள் சிலரும் கடைகளை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர். கடைகளை அடைக்க வேண்டும் என்றோ, அல்லது திறக்க வேண்டும் என்றோ யாரும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை’’ என்றார்.

Related Tags :
Next Story