2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு

2 வேட்பாளர்களும் சமமான வாக்குகள் பெற்றதால் மாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார்.
தஞ்சாவூர்,
தஞ்சை ஊராட்சி ஒன்றியத்தில் 61 ஊராட்சி மன்ற தலைவர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. மாத்தூர் கிழக்கு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு விமானம் சின்னத்தில் மலர்விழியும்(வயது43), கைஉருளை சின்னத்தில் மஞ்சுளாவும்(47) போட்டியிட்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் போது இருவரும் தலா 409 வாக்குகள் பெற்றனர். இதையடுத்து ஊராட்சி தேர்தல் சட்டத்தின்படி குலுக்கல் முறையில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தேர்தல் நடத்தும் அலுவலர் பிரபாகரன் அறிவித்தார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
பின்னர் மலர்விழி, மஞ்சுளா ஆகியோரை அழைத்த தேர்தல் நடத்தும் அலுவலர், வெள்ளை தாளில் இருவரின் பெயரையும் எழுதி அந்த தாளை சுருட்டினார். அந்த தாள் ஒரு அட்டைப்பெட்டியில் போட்டு குலுக்கி மேஜையில் போட்டனர். அவற்றில் ஒன்றை தேர்தல் நடத்தும் அலுவலர் எடுத்து அதில் எழுதப்பட்டிருந்த பெயரை வாசித்தார்.
அதில் மஞ்சுளாவின் பெயர் வந்திருந்தது. இதைத்தொடர்ந்து அவர் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story