வேறொருவருடன் குடும்பம் நடத்தியதுடன் பணம் கேட்டு தொல்லை: தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை - போலீசில் கணவர் சரண்

வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்ததுடன் பணம் கேட்டு தொல்லை கொடுத்ததால் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அவரது கணவர், போலீசில் சரண் அடைந்தார்.
கலபுரகி,
கலபுரகி (மாவட்டம்) அருகே அவுரதா கிராமத்தை சேர்ந்தவர் ஷரணப்பா (வயது 32). இவர் விவசாயம் செய்து வந்தார். அதே கிராமத்தை சேர்ந்தவர் ஷரணம்மா (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதற்கிடையே கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷரணப்பாவை விட்டு ஷரணம்மா பிரிந்து சென்றுவிட்டார். பின்னர் வெளியூர் சென்று அவர், வேெறாரு வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷரணம்மா அவுரதா கிராமத்திற்கு வந்து தங்கினார். பின்னர் அவர் ஷரணப்பாவிடம், திருமணத்தின் போது தனது பெற்றோர் கொடுத்த பணத்தை தரும்படி கேட்டு வந்துள்ளார். ஆனால் பணம் கொடுக்க மறுத்ததால் அவருடன் ஷரணம்மா தகராறு செய்து வந்துள்ளார்.
வேறொரு வாலிபருடன் குடும்பம் நடத்தி வந்ததுடன், தன்னிடம் பணம் கேட்டு ஷரணம்மா தொல்லை கொடுத்து வந்ததால், ஷரணப்பா அவரை தீர்த்துக்கட்ட திட்டம் போட்டார். அதன்படி ஷரணம்மாவிடம் செல்போனில் பேசிய ஷரணப்பா, பணம் தருவதாக கூறி தனது தோட்டத்துக்கு வரும்படி அழைத்துள்ளார்.
அதன்பேரில் ஷரணம்மா நேற்று அங்கு சென்றுள்ளார். அப்போது ஷரணப்பாவிடம் ஷரணம்மா பணம் கேட்டுள்ளார். உனக்கு எதற்கு பணம் தர வேண்டும் என்று கூறியதுடன் அவரை ஷரணப்பா அடித்து உதைத்துள்ளார். மேலும் பெரிய கல்லை எடுத்து ஷரணம்மாவின் தலையில் போட்டுள்ளார்.
இதில் தலை உடைந்து ரத்த வெள்ளத்தில் அவர் துடி,துடித்து உயிரிழந்தார். பின்னர் ஷரணப்பா, கலபுரகி புறநகர் போலீஸ் நிலையத்திற்கு சென்று, சம்பவம் பற்றி கூறி போலீசில் சரண் அடைந்தார்.
இதைதொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பிணமாக கிடந்த ஷரணம்மாவின் உடலை போலீசார் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கலபுரகி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
இதுபற்றி கலபுரகி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். வேறொருவருடன் குடும்பம் நடத்தி வந்ததுடன் பணம் கேட்டு தொல்லைகொடுத்த மனைவியை, விவசாயி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story