முதல் திருப்புதல் தேர்வு: பிளஸ்-2 கணித வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது - கல்வியாளர்கள் அதிர்ச்சி
பிளஸ்-2 கணிதம் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
கோவை,
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வை எதிா்கொள்வதற்காக அரையாண்டு தேர்வுக்கு பின்னர் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி கோவை உள்பட தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு முதல் திருப்புதல் தேர்வு நேற்று தொடங்கியது.
இதில் கணித தேர்வு வருகிற 13-ந் தேதி நடக்கிறது. ஆனால் கணித தேர்வுக்கான வினாத்தாள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இதனால் கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:-
பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான அரையாண்டு தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைத்தளங்களில் வெளியானது. இது போல் தற்போது பிளஸ்-2 கணிதம் முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாளும் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதில் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து அரசு கடும் தண்டனை வழங்க வேண்டும். சமூகவலைத்தளங்களில் வினாத்தாள் வெளியாகி விட்டதால், பிளஸ்-2 கணித தேர்வுக்கு புதிய வினாத்தாள் அச்சடித்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story