மாவட்ட செய்திகள்

10-ம் வகுப்பு வரை மராத்தியை கட்டாயமாக்க நடவடிக்கை; துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேச்சு + "||" + Measures to make Marathi compulsory till 10th grade ; Deputy Chief Minister Ajith Pawar talks

10-ம் வகுப்பு வரை மராத்தியை கட்டாயமாக்க நடவடிக்கை; துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேச்சு

10-ம் வகுப்பு வரை மராத்தியை கட்டாயமாக்க நடவடிக்கை; துணை முதல்-மந்திரி அஜித்பவார் பேச்சு
மராட்டியத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பள்ளிகளில் மராத்தி பாடத்தை கட்டாயமாக்குவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக துணை முதல்-மந்திரி அஜித்பவார் கூறினார்.
மும்பை,

மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித்பவாருக்கு அவரது சொந்த ஊரான பாராமதியில் பாராட்டு விழா நடந்தது. இதில் அஜித்பவார் கலந்து கொண்டு பேசியதாவது:- ஆங்கில வழி பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கிறது. அவர்கள் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகிறார்கள். 

ஆனால் மராத்தியை அவர்களுக்கு சரியாக எழுதவும், வாசிக்கவும் தெரியவில்லை. நாம் மராட்டியத்தில் வாழ்கிறோம். எனவே ஒவ்வொருவருக்கும் மராத்தியை சரியாக எழுதவும், வாசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

இதற்கு விரைவில் தீர்வு காண போகிறோம். உருது, இந்தி, ஆங்கில வழி என அனைத்து பள்ளிகளிலும் முதலாம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை மராத்தி கட்டாயமாக்கப்பட வேண்டும். இதை மாநில அரசு பரிசீலனை செய்து வருகிறது. 

கூடுதல் பாடத்தைப் படிக்க நிர்பந்திக்கப்பட்டால் 10-ம் வகுப்பு தேர்வில் தங்களது மதிப்பெண்கள் பாதிக்கப்படலாம் என சில மாணவர்கள் நினைக்கலாம். மதிப்பெண் சதவீதத்தை மட்டுமே நினைக்க வேண்டாம் என அவர்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். ஏனெனில் நமது தாய்மொழி பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...