தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் டிரீம் கிச்சனின் புதிய பகுதி திறப்பு - கலெக்டர் சந்தீப்நந்தூரி திறந்து வைத்தார்


தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் டிரீம் கிச்சனின் புதிய பகுதி திறப்பு - கலெக்டர் சந்தீப்நந்தூரி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 12 Jan 2020 10:30 PM GMT (Updated: 12 Jan 2020 12:50 PM GMT)

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளால் செயல்பட்டு வரும் டிரீம் கிச்சனின் புதிய பகுதியை மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி திறந்து வைத்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் கொண்டு டிரீம் கிச்சன் இயங்கி வருகிறது. இங்கு சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.4 லட்சம் மதிப்பில் மின் இணைப்புடன் கூடிய புதிய பகுதி மற்றும் ரூ.1.31 லட்சம் மதிப்பில் ஜெராக்ஸ் எந்திரம், லேமினேசன் எந்திரம், ஸ்பைரல் பைண்டிங் எந்திரம் என மொத்தம் ரூ.5.31 லட்சம் மதிப்பில் உருவாக்கப்பட்ட புதிய பகுதி மற்றும் எந்திரங்களின் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி கலந்து கொண்டார். அவர் ரிபன் வெட்டி புதிய பகுதியை திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் குத்து விளக்கு ஏற்றி எந்திரங்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார். அப்போது அவர், பொதுமக்கள் வந்து செல்ல பேவர் பிளாக் அதிகமாக அமைக்கவும், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திடவும் அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் (வருவாய்) விஷ்ணுசந்திரன், உதவி கலெக்டர் சிம்ரான்ஜித்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தனபதி, மகளிர் திட்டம், திட்ட அலுவலர் ரேவதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் வெங்கடேசன், உதவி பொறியாளர் தளவாய் மற்றும் அலுவலர்கள், டிரீம் கிச்சன் பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

Next Story