சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 2,098 பேர் எழுதினர்


சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 2,098 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 12 Jan 2020 11:00 PM GMT (Updated: 12 Jan 2020 7:44 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 98 பேர் எழுதினார்கள்.

ஈரோடு,

தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வாணையம் சார்பில், 969 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்காக ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஆண்கள் -பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 862 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இவர்களுக்கு தேர்வு எழுதுவதற்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

இந்த நிலையில் பொது பிரிவை சேர்ந்தவர்களுக்கு நேற்று எழுத்து தேர்வு நடந்தது. இதற்காக ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. எழுத்து தேர்வுக்கு அழைப்பு கடிதங்கள் பெறப்பட்டவர்கள் நேற்று காலை 8 மணிக்கு முன்னதாகவே திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி முன்பு வரிசையாக காத்திருந்தனர்.

எலக்ட்ரானிக் பொருட்கள்

இதைத்தொடர்ந்து தேர்வு எழுதுபவர்கள் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். பைகள், செல்போன், கால்குலேட்டர், எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்துக்குள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அழைப்பு கடிதம், அடையாள அட்டை, நீலம் மற்றும் கருப்பு நிற பந்துமுனை பேனா ஆகியவவை மட்டுமே தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்துக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்பட்டனர். தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது.

764 பேர் வரவில்லை

அதைத்தொடர்ந்து 10.15 மணிக்கு பின்னர் வந்தவர்கள் தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கோவை ஐ.ஜி. பெரியய்யா, ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் தேர்வு மையத்தை பார்வையிட்டனர். மேலும் தேர்வு மையத்தில் 232 போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

இந்த தேர்வை ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 98 பேர் எழுதினார்கள். தேர்வுக்கு விண்ணப்பித்ததில் 764 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வு மதியம் 12.30 மணிக்கு முடிந்தது. போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் 274 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்காக விண்ணப்பித்து உள்ளனர். இவர்களுக்கு எழுத்து தேர்வு இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது.


Next Story