முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்


முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் ஷில்பா தகவல்
x
தினத்தந்தி 31 Jan 2020 10:30 PM GMT (Updated: 31 Jan 2020 10:26 PM GMT)

முதல்-அமைச்சர் விளையாட்டு விருதுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நெல்லை, 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு அளவிலும், தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகளை சிறப்பிக்கும் வகையில் 2 வீரர்கள், 2 வீரங்கனைகள், 2 சிறந்த பயிற்றுநர்கள், 2 சிறந்த உடற்கல்வி இயக்குனர்கள் அல்லது உடற்கல்வி ஆசிரியர்களுக்கு முதல்-அமைச்சர் மாநில விளையாட்டு விருது, பரிசு தொகை ரூ.1 லட்சமும், ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள தங்க பதக்கமும், பாராட்டு பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்த விருது ஆண்டுக்கு 3 வருடங்களுக்கு முன்பு விளையாட்டில் சாதனை படைத்த விவரங்களை சமர்ப்பித்தவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். இது தவிர விளையாட்டு போட்டிகள் நடத்தும் நிர்வாகி, நன்கொடையாளருக்கும், போட்டி நடுவர்களுக்கும் இது போன்று விருது வழங்கப்படும்.

இந்த விருது பெறக்கூடியவர் தமிழ்நாட்டில் வசிக்கவேண்டும். 2 முறை தமிழக அணி சார்பில் கலந்து கொண்டு இந்தியாவின் சார்பாக விளையாடியவர்கள் தகுதி பெறுவர். இந்த விருது பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பபடிவத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளத்தின் மூலம் www.sdat.tn.gov.in பெற்றுக்கொள்ளலாம். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை வருகிற 10-ந்தேதிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலருக்கு வந்து சேரும்படி அனுப்பவேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார்.

Next Story