திருக்கழுக்குன்றத்தில் அகல் விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி சாவு


திருக்கழுக்குன்றத்தில் அகல் விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 21 Feb 2020 4:15 AM IST (Updated: 20 Feb 2020 11:08 PM IST)
t-max-icont-min-icon

திருக்கழுக்குன்றத்தில் அகல் விளக்கு தீ சேலையில் பிடித்து மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

கல்பாக்கம்,

திருக்கழுக்குன்றம் புதுமேட்டுத்தெருவை சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 80) பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 18-ந் தேதி காலை 8.30 மணியளவில் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

. கோவில் வாசலில் நின்று அவர் சாமி தரிசனம் செய்து கொண்டிருந்த போது அருகில் இருந்த அகல் விளக்கு தீ அவரது சேலையில் பட்டது. இதில் சேலை தீப்பிடித்து எரிந்தது.

இதில் தீக்காயம் ஏற்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story