கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2020 3:15 AM IST (Updated: 28 Feb 2020 12:50 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 20 சப்-இன்ஸ்பெக்டர்களை மாவட்டத்திற்குள்ளேயே பணியிட மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இது பற்றிய விவரம் வருமாறு:-

வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர் ஏழுமலை, கீழ்குப்பம் போலீஸ் நிலையத்துக்கும், சின்னசேலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் வினோத்குமார், உளுந்தூர்பேட்டைக்கும், ஜம்புலிங்கம், வரஞ்சரத்துக்கும், தியாகதுருகம் பாலமுரளி, சின்னசேலத்துக்கும், உளுந்தூர்பேட்டை கோபி, பகண்டை கூட்டுசாலைக்கும், சங்கராபுரம் சிவச்சந்திரன், திருக்கோவிலூருக்கும், எடைக்கல் அகிலன், உளுந்தூர்பேட்டைக்கும், திருநாவலூர் அருள் செல்வம், எடைக்கல்லுக்கும், மணலூர்பேட்டை அன்பழகன், ரி‌ஷிவந்தியத்துக்கும், ரி‌ஷிவந்தியம் ராஜசேகர், மணலூர்பேட்டைக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை குருபரன், திருநாவலூர் போலீஸ் நிலையத்துக்கும், திருக்கோவிலூர் குணபாலன், திருப்பாலப்பந்தலுக்கும், ரி‌ஷிவந்தியம் மணிமேகலை, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், உளுந்தூர்பேட்டை அலெக்ஸ், திருநாவலூருக்கும், கள்ளக்குறிச்சி பிரபாகரன், தியாகதுருகத்துக்கும், கீழ்குப்பம் ராஜா, கரியாலூருக்கும், தியாகதுருகம் சேகர், கள்ளக்குறிச்சிக்கும், தியாகதுருகம் விநாயகம், வரஞ்சரத்துக்கும், திருக்கோவிலூர் செல்வம், மணலூர்பேட்டைக்கும், பகண்டை கூட்டு சாலை பிரபாகரன், சின்னசேலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story